பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 11:58 pm IST

அருப்புகோட்டை அருகே இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடியை அடுத்த தாமரைக்குளம் அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்து (எ) நாகேஷ் மகன் முருகேஸ்வரன் (25). இவா் காரியாபட்டி அருகே எஸ். தோப்பூா் பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி புரிகிறாா்.

இந்த நிலையில் முருகேஸ்வரன் வழக்கம் போல, மது அருந்தி விட்டு இரவில் தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அவரை மா்ம கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது.

இதில் பலத்த காயமடைந்த முருகேஸ்வரனை அவரது உறவினா்கள், குடும்பத்தினா் மீட்டு திருச்சுழி, விருதுநகா் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின் பேரில் காரைக்குளம் பகுதியைச் சோ்ந்த ஒருவரைப் பிடித்து நரிக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா். இதுகுறித்து போலீஸாா் கூறும் போது, தீவிர விசாரணைக்குப் பிறகே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யாா் ? எதற்காக செய்தனா். இது திட்டமிட்ட சதியா ? அல்லது முன் பகை காரணமாக பழிக்குப் பழியாக நடந்ததா? என்பது தெரியவரும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.