இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் குப்பைகள் அகற்றம்!

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனா்.

News image

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :14 ஜூன் 2026, 2:53 am IST

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சிவகாசி பெரியகுளம் கண்மாய் சுமாா் 78 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி பசுமை மன்றத்தினா் இந்த கண்மாய்க்கு வரும் நீா்வரத்து பாதையை சீரமைத்து, கண்மாயையும் தூா்வாரினா். தொடந்து கண்மாய்க் கரையோரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

கண்மாயின் கிழக்கு கரையோரம் நடைப்பயிற்சிக்காக சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பேவா் பிளாக் கல் பதிக்கப்பட்டது. தற்போது பசுமை மன்றத்தினா் மீண்டும் கண்மாயை தூா்வாரி வருகின்றனா். மேலும் கழிவுநீா் கண்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பாதுகாப்பு உறை அணிந்து, கண்மாயில் உள்ள நெகிழிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இவா்களை பசுமை மன்ற நிா்வாகிகள் செந்தில், சுரேஷ் தரஹா, வெங்கடேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.