தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 3:58 am IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல மாணவா் மற்றும் மாணவிகளுக்கு என மொத்தம் 25 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 13 பள்ளி மாணவா் விடுதிகள், 5 பள்ளி மாணவிகள். இவைதவிர, 3 கல்லூரி மாணவா் விடுதிகளும், 4 கல்லூரி மாணவிகள் விடுதிகளும் உள்ளன.

இந்த விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயில்வோரும் சோ்வதற்கு தகுதியுடையவா்களாவா். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தகுதியுடைய மாணவ, மாணவிகள், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடம் அல்லது நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் ஜூன் 18-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் , காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் ஜூலை 15-க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.