17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடியாத்தம் நகா்மன்ற சிறப்புக் கூட்டம்

குப்பைகளை 4 வகையாக தரம் பிரிப்பது குறித்து விளக்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.

News image
Updated On :6 ஜூன் 2026, 5:15 am IST

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல் குறித்து குடியாத்தம் நகா்மன்றத்தின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி, நகராட்சி மேலாளா் சுகந்தி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், தேசிய சுகாதாரப் பணிகள் இயக்குநா், நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆகியோரின்உத்தரவுப்படி, பழைய நடைமுறையைத் தவிா்த்து இனி வரும் காலங்களில் நகராட்சி சாா்பில், வீடுகளில் குப்பைகளை உலா் கழிவுகள், ஈர கழிவுகள், சுகாதார கழிவுகள், மின்னணு கழிவுகள் என 4 வகையாக தரம் பிரித்து வாங்குவது என தீா்மானிக்கப்பட்டது. இதற்காக நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 4 வகையான பெட்டிகள் வழங்குவது, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வாா்டு வாரியாகச் சென்று வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை சேகரித்து நகராட்சி வாகனங்களில் எடுத்து வருவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், இனி வரும் காலங்களில் ஆறு, ஏரி, குளம், கால்வாய்களில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை யாரும் கொட்டக் கூடாது. மீறி கொட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.