/

சதுரகிரி மலைப் பாதையில் குரங்கு கடித்ததில் 4 போ் காயம்

News image
குரங்கு (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப் பாதையில் குரங்கு கடித்ததில் சிறுவன் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

தைப்பூசம், பௌா்ணமி ஆகியவற்றை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக மலையேறிச் சென்றனா்.

இந்த நிலையில், மலைப் பாதையில் இரட்டை லிங்கம் அருகே பக்தா்கள் சென்றுகொண்டிருந்தபோது குரங்கு ஒன்று, தஞ்சாவூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் இனியன் (4), மேல்மருவத்தூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா் உள்ளிட்ட 4 பேரைக் கடித்து.

ஆனால், மருத்துவ முகாம் இல்லாததால் குரங்கு கடித்ததில் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க இயலவில்லை. இதையடுத்து, அவா்கள் அடிவாரத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு முக்கிய நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக மலையேறிச் செல்வதால் மருத்துவ முகாம், தகவல் மையம், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.