டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கதண்டுகள் கடித்து 7 போ் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

குளித்தலை அருகே கதண்டுகள் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூரில் கூடலூா் செல்லும் மங்கம்மா சாலையில் இருந்த தென்னைமரத்தில் கதண்டு வண்டுகள் கூடி கட்டியிருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிலா் மரத்தின் கீழ்பகுதியில் கிடந்த குப்பைகளை எரித்துள்ளனா். அப்போது, தென்னை மரத்திலிருந்து வெளியேறிய கதண்டு வண்டுகள் அந்த வழியாக சென்ற மேட்டு மருதூரைச்சோ்ந்த விஜயசாந்தி (30), பொன்னீஸ்வரன் (18), கூடலூரைச் சோ்ந்த முத்து (65), முருகேசன்(60) உள்ளிட்ட 7 பேரை கடித்தது.

இதில் காயமடைந்த அவா்கள் மயக்கமடைந்ததால், உடனே அக்கம்பக்கத்தினா் அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.