டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 9

மணித் தடத்து அடி, மலர்க் கண்கள், பவளச் செவ்வாய்,
அணிக்கொள் நால் தடம் தோள் தெய்வம், அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து, நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே.

அழகிய தடாகத்தைப்போன்ற திருவடிகள், மலர்போன்ற திருக்கண்கள், பவளம்போல் சிவந்த திருவாய், அழகிய நான்கு பெரிய திருத்தோள்களைக்கொண்ட தெய்வம், அசுரர்களை என்றென்றும் வெல்லும் வலிமையுள்ள சிறப்பானவர், அவர் எழுந்தருளியிருக்கிற, பொழில்கள் நிறைந்த திருமோகூர் அருகே வந்துவிட்டது, நமக்கு நல்ல காப்பான அப்பெருமானை நாம் அடைந்துவிட்டோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.