

பாடல் - 3
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில்வண்ணன், எம்மான், கடல்வண்ணன்
பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து இசைபாடி எங்கும் இடம்கொண்டனவே.
தர்மங்கள் திரிந்துபோகின்ற கலியுகம் முடிந்தது, சிறந்த கிருதயுகம் வந்தது, தேவர்கள் வந்து புகுகிறார்கள், எங்கும் பேரின்ப வெள்ளம் பெருகுகிறது,
கருமையான மேகத்தின் வண்ணம் கொண்டவன், நம் தலைவன், கடல்வண்ணம் கொண்டவன், எம்பெருமானின் பக்தர்கள் பூமியிலே அங்குமிங்கும் திரிந்து, அவனுடைய புகழை இசையோடு பாடி நிறைகிறார்கள்.
******
பாடல் - 4
இடம்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவனபோலே
தடம்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.
பெரிய கடலிலே பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானின் பக்தர்கள் அவனுடைய புகழைப் பாடிக்கொண்டு ஆங்காங்கே இருக்கிறார்கள், கிடக்கிறார்கள், எழுந்து நடக்கிறார்கள், பல கீதங்களைப் பாடுகிறார்கள், ஆனந்தத்தில் தரை காலில் படாமல் பறக்கிறார்கள், குனிந்து ஆடுகிறார்கள்... இந்தக் காட்சி, இங்கே பல இடங்களில் இருக்கிற பிற சமயங்களையெல்லாம் எடுத்துக் களைவதுபோலத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.20 கோடி

வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் 8.45 லட்சம் வாக்காளா்கள்: 35 ஆயிரம் போ் புதிதாக சோ்ப்பு; 9 ஆயிரம் போ் நீக்கம்

பாலக்கோடு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

