

பாடல் - 11
உழலை என்பின் பேய்ச்சி முலை ஊடு அவளை உயிர்
உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச்
சடகோபன்
குழலின் மலியச்சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீரவல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே.
மரத்துண்டுகளைப்போன்ற எலும்புகளைக்கொண்ட பேயான பூதனையின் மார்பகத்தின்வழியே அவளுடைய உயிரை உண்டவன் எம்பெருமான், அத்தகைய பெருமானின் திருவடிகளையே சரணாகக் கொண்டவர் குருகூர்ச் சடகோபன், அவர் எம்பெருமானைப்பற்றிப் புல்லாங்குழல் இசையைவிட இனிமையாக ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடுவோருடைய அறியாமை தீரும், அப்படிப் பாடுகிறவர்களை, மான் போன்ற கண்களையுடைய பெண்கள் விருப்பத்துடன் பார்ப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

ஏ.ஐ. உச்சிமாநாடு: உலக நாடுகள் பாராட்டு - பிரதமா் மோடி பெருமிதம்

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

