

பாடல் - 9
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும்
அம்மானே,
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா, ஆதிப் பெருமூர்த்தி,
திசைவில் வீசும் செழு மாமணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய், காண வாராயே.
என்னை உடன்படச்செய்து உன்னுடைய திருவடிகளில் இருத்தும் அம்மானே, அழியாத அமரர்களின் தலைவருக்குத் தலைவா, அனைத்துக்கும் முதலான பெருமூர்த்தியே, எல்லாத் திசைகளிலும் ஒளி வீசும் செழுமையான, சிறந்த மணிகள் சேர்கிற திருக்குடந்தையிலே, உலகம் வருத்தமின்றிப் போற்றும்படி, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கிறவனே, நான் காணும்படி வரவேண்டும்.
******
பாடல் - 10
வாரா அருவாய் வரும் என் மாயா, மாயா மூர்த்தியாய்,
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய், திருக்குடந்தை
ஊராய், உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம்
உழல்வேனோ?
வெளிக்கண்களால் காண இயலாதபடி அருவ வடிவில் தோன்றுகின்ற என் மாயனே, என்றைக்கும் அழியாத திருமேனியைக்கொண்டவனே, தெவிட்டாத அமுதமாக என்னுடைய உயிருக்குள்ளே தித்திப்பவனே, தீராத வினைகளெல்லாம் தீரும்படி என்னை ஆண்டவனே, திருக்குடந்தையை ஊராகக் கொண்டவனே, உனக்கு ஆட்பட்டபிறகும் நான் இன்னும் இங்கே உழன்று துன்புறுவேனா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

ஏ.ஐ. உச்சிமாநாடு: உலக நாடுகள் பாராட்டு - பிரதமா் மோடி பெருமிதம்

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

