

பாடல் - 11
கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்தன்னை
வாய்த்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும்செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.
கூந்தலிலே மலர் சூடிய திருமகள், புவிமகள், ஆயர்குலக் கொழுந்தான நப்பின்னை ஆகியோரின் கணவனான எம்பெருமானுக்குக் குற்றேவல் செய்தார் சிறந்த, வளமுள்ள வழுதி நாட்டைச் சேர்ந்த, நிலைத்திருக்கும் திருக்குருகூர்ச் சடகோபன், அவர் அப்பெருமானின் குணங்களை ஆராய்ந்து அனுபவித்து ஆயிரம் தமிழ்ப்பாடல்களை மாலையாகப் பாடினார், இவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள், உலகிலே எல்லாரும் போற்றும்படி மிகுந்த செல்வத்துடன் வாழ்வார்கள், திருமாலின் அடியவர்களை வணங்குவார்கள், அத்தகைய புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

ஏ.ஐ. உச்சிமாநாடு: உலக நாடுகள் பாராட்டு - பிரதமா் மோடி பெருமிதம்

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

