

பத்துஉடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கு அரிய
வித்தகன், மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்,
மத்துஉறு கடை வெண்ணெய் களவினில் உரவுஇடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்துஇருந்து ஏங்கிய எளிவே.
எம்பெருமான் பக்தியுடைய அடியவர்களுக்கு எளியவன், மற்றவர்களுக்கு அரியவன், சிறந்த குணங்களைக்கொண்டவன், தாமரைமலரிலே வீற்றிருக்கும் திருமகள் விரும்பும் பெருமான், நாம் பெறுவதற்கு அரிதான கடவுள், அத்தகைய பெருமான், கண்ணனாக அவதரித்தபோது, மத்தை இட்டுக் கடையப்படுகிற வெண்ணெயைத் திருடினான், அதற்காக ஆய்ச்சி அவனுடைய மார்பில் கயிறைக்கட்டி, ஓர் உரலோடு சேர்த்துக் கட்டிப்போட்டாள், அங்கே அந்த உரலோடு இருந்து ஏங்கிக்கொண்டிருந்தான் அவன், பெருமானுக்குதான் எப்பேர்ப்பட்ட எளிமை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

