முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5
எல்லார் மீதும் ஒரேமாதிரி அன்பு செலுத்துகிறான்


கொள்கை, கொளாமை இலாதான்,
எள்கல் இராகம் இலாதான்,
விள்கல் விளாமை விரும்பி
உள்கலந்தார்க்கு ஓர்அமுதே.
சிலரைத் தன் அடியவர்களாகக் கொள்ளலாம், சிலரைக் கொள்ளக்கூடாது என்று எம்பெருமான் எண்ணுவதில்லை, எல்லார் மீதும் ஒரேமாதிரி அன்பு செலுத்துகிறான், அதேபோல், சிலர்மேல் வெறுப்பையும், சிலர் மேல் விருப்பத்தையும் அவன் காட்டுவதில்லை, அனைவரையும் ஒரே மாதிரி நடத்துகிறான், அவன் பார்ப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான்: இவர்கள் வேறு விஷயங்களை விரும்பி விலகிச்செல்கிறார்களா, அல்லது, விலகாமல் அவன் திருவடியில் இருக்கிறார்களா? இதைமட்டுமே அவன் கவனித்து, தன்னிலே கலந்தவர்களுக்கு அமுதமாகத் திகழ்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...