முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3
எல்லார் மீதும் அன்பு காட்டுகிறவன் எம்பெருமான்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

ஈடும் எடுப்பும்இல் ஈசனை
மாடுவிடாது என் மனனே,
பாடும் என்நா அவன்பாடல்,
ஆடும் என்அங்கம் அணங்கே.
இவன் தாழ்ந்தவன், இவனை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இவன் உயர்ந்தவன், இவனை ஏற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் எண்ணாமல், எல்லார் மீதும் அன்பு காட்டுகிறவன் எம்பெருமான், அத்தகைய பெருமானை என் மனம் ஒருபோதும் விடாது, என் நாக்கு அவனுடைய பாடல்களையே பாடும், என் உடல், தெய்வம் ஏறியவர்களைப்போல் அவனை எண்ணி ஆடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...