முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11
தமிழர்களும் இசைவல்லுநர்களும் பக்தர்களும்


மாலே! மாயப்பெருமானே! மாமாயவனே! என்றுஎன்று
மாலே ஏறி மால்அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பால்ஏய் தமிழர், இசைகாரர், பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க்கு இல்லை பரிவுஅதே.
மாலே! மாயப்பெருமானே! சிறந்த மாயங்களைச் செய்கிறவனே!
இப்படியெல்லாம் பித்தேறிப் பிதற்றினார் சடகோபர். சிறப்பு நிலைத்த குருகூரிலே அவதரித்த அவர், திருமாலின் அருளால் அவரைப் போற்றிப் பாடினார்.
தமிழர்களும் இசைவல்லுநர்களும் பக்தர்களும் வணங்கிப்பாடும்படி அவர் இயற்றிய ஆயிரம் பாடல்களும் பால்போல் இனியவை, அவற்றுள் இந்தப் பத்தையும் பாட வல்லவர்களுக்கு எந்தத் துன்பமும் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...