என்றும் என் இதயத்தில்: பாலா கார்த்திகேயன்


அன்று முதல் இன்று வரை
என்றுமே நிலைத்திருக்கிறாய்
ஒன்றான இரு இதயங்கள்
கண்ணிரெண்டின் கண்மணிகள்
வடிவம் பதிந்து உள்ளது
நரம்புகள் போல் பின்னியுள்ளது
ஆயிரம் துன்பம் வரினும்
ஆதரவாய் நிலைத்திருப்பது
விட்டுக் கொடுத்தலில்
மேன்மை கண்டது
விடாமல் செடி போல் மனதில்
பற்றிக் கொண்டது
தள்ளி தள்ளி போனாலும்
தன்னிகரற்ற நினைவுகளால்
ஒன்றிணைவது
அள்ளி அள்ளி எப்போதும்
அணைக்கத்துடிப்பது
என்றும் என் இதயத்தில்
அன்று முதல் இன்று வரை
ஊன்றி நிலைத்திருப்பது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...