நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: கவிஞர் பி.மதியழகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

சிறுமிகளின் சிதறல்கள்
சிறகை உடைத்துக் கதறல்கள்
உழவின் வழிமறந்த
உதவாக் கரைகளின்

ஊனமான பார்வைகள்
மக்களை மக்களாய்
மதியாதா மந்திரிகள்
மந்தியைவிட முந்திச் சென்று

பணம் குடிக்கும் பிண முதலைகள்
திட்டமில்லாத வட்டமேசைப் போட்டு
தினம் தினம் பல பேட்டிகள்
பட்டுப்போகும் மண்ணின் வளம்

பார்த்துச் சிரிக்கும்
பனங்காட்டு நரிகள்
சுவாசிக்க சுத்தமானக் காற்று
கேட்டவனை சுட்டுக் கொன்ற

கொடுமைகள் இவை
என்றும் என் இதயத்தில்
படிந்தக் கறுப்புக் கறைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.