என்றும் என் இதயத்தில்: கவிஞர் ராம்க்ருஷ்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கன்றும் பசுவும் கொஞ்சும் பாசமழை போலேஅன்றும் இன்றும் மாறாத நிலவு ஒளிபோலேநின்று சீராகப் பெய்யும் ஐப்பசி மழை போலேஎன்றும் என் இதயத்தில் பெற்ற தாயிருக்கிறாள்வாழ்வில் வசந்த நிலவாய் வந்தவள் இல்லாள்தாழ்வில் மனதைக் கைதூக்கி விட்டவள் அவளேஆழ்மனக் கோயிலில் அன்பின் திருவுருவானவள்ஏழ்பிறவிக்கும் என்றும் என் இதயத்தில் அவளேஇச்சையில் உதித்த இளம் நிலவாய் பிறந்தாள்உச்சி முகர்ந்து உள்ளம் குளிர வைத்த நிலவுபச்சிளம் பாலகியாய் பாசமழை பொழிகிறாள்பிச்சிப் பூவென என் இதயத்தில் வீற்றிருக்கிறாளேஎண்ணும் எண்ணங்கள் செயல் வடிவம் பெறுவதுகண்ணும் கருக த்துமாய் என்னை வாழ்விப்பதெனதண்ணென்ற நிலவாய் எனை வழி நடத்துபவன்மண்ணுயிர்க்குக் காவலன் என்றும் என் இதயத்திலேமக்கட்குத் தீங்கு நடக்கும்போதெல்லாம் மன ஊஞ்சல்இக்கட்டில் தவிக்கும் அவரை கரை தூக்கி விடவும்திக்கெட்டும் அவர் தம் துன்பங்கள் தெறித்தோடவும்சக்கரமாய்ச் சுற்றும் அன்பு என்றும் என் இதயத்திலே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...