சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

ஒற்றைச் சிறகோடு: பேராசிரியர் கிருஷ்ணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

கவிதைமணி

அமெரிக்காவில் பாதி இளைஞர்கள்
ஒற்றைப் பெற்றோருடன் அல்லது தனித்து என்றேன்.
தனிமனித சுதந்திரத்தின் உச்சம் என்றார்.
ஆதரவற்ற அவல நிலை என்றேன்
ஆதரவு அரசின் பொறுப்பு என்றார்.

கட்டுப்பாடற்ற கலாச்சாரம் என்றேன்.
கட்டுப்பட்டிக் காலாச்சாரம் கள்ளம் என்றார்.
விலங்கு போல் வாழ்க்கை என்று சொல்லத் துடித்தேன்.
அவை கூட ஒரு கட்டுக்குள் இருப்பதாய் நிறுத்தினேன்.
ஒற்றைச் சிறகுடன் ஒரு பறவை என்றேன்.
ஐயோ பாவம் என்றார்.
கூண்டுக்குள் பறவை என்றேன்
இரக்கமற்ற வக்ரம் என்றார்.

ஒற்றைச் சிறகு பறவையைக் கூண்டுக்குள்
பாதுகாப்பது நான் என்றேன்.
நீ வெட்டி வேலை பார்க்கிறாய் என்றார்.
பிள்ளைகளைக் காக்கும் இந்தியம் பாவம் என்பதா ?
அல்லது அவர் இரண்டு இறக்கை இருந்தும்
பறக்கவொண்ணா வாத்து மடையர் என்பதா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.