சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

ஒற்றைச் சிறகோடு: கோவை.நா.கி.பிரசாத்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

கவிதைமணி

ஒற்றைச்சிறகிழந்த
அந்தப் பறவை...
வெட்டும் மரத்தை
சுற்றி சுற்றி வருகிறது!
அய்யகோ பசியோடு
கூட்டில் குஞ்சுகள்!

நடைப்பிணமாய்
சிறைபட்ட கிளி !
வானம் பார்த்த
கண்களுக்குள்
வாழ்க்கை கனவுகள்!

ஓட்டுவீடுகளின் மரணம்
கூடெனும் சிறகிழந்து
குடும்பம் நடத்தமுடியாமலேயே
சுவரில் மோதியே சவமாகிறது!

தண்ணீர் சிறகு
தனலாய் தகிக்க
வெயிலில் வெந்தே
சொட்டுஈரமின்றி
எட்டு எடுத்து வைக்காமலேயே
உயிர் உலர்ந்துகிடக்குது!

சிகரம் தொட
சிறகை விரித்ததும்
அன்று வேடனின் அம்பு
இறகை முறித்தது!

இன்று...
இயந்திர டவரும்
மனிதத் தவரும்
உலக உறவையே
பறிக்கிறது!

மனிதா...
நீ மட்டும்
உருட்டி விளையாட
உனக்கான
கால் பந்தல்ல பூமி!

உயிரினங்கள் அனைத்தும்
திரண்டு திளைத்திடும்
முழுப்பந்துடா!

இயற்கையின் இறகுகளை
ஒவ்வொன்றாய் பிடுங்கி
எங்கே உயரப்பறக்க நினைக்கிறாய் நீ!?

நினைவில் வை....
புழுவிலிருந்து
புறப்பட்டவன்தான் நீ!

அனைத்தையும் புறகணித்து
ராட்ஷச சுயத்தோடு
ரகசியமாய் திரிந்தால்
உனது வாழ்க்கைச்சிறகுகளும் 
பொசுங்கிவிடும்

பின் புழுக்களும்
உன் பிணத்தை உண்ணாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.