ஒற்றைச் சிறகோடு: அழகூர். அருண். ஞானசேகரன்


ஒற்றைச் சிறகுயென உன்னதநல் அன்னங்களும்
மற்றதைப்போல் காணுமோ மகிழ்வுதனை? --பெற்றிட்ட
இரண்டினிலே ஒருசிறகை இழந்திட்டப் பறவையென
விரக்தியே; வாழ்வதுவே வீண் !
ஒற்றைச் சிறகுயென , உயர்வானில் பறந்துமகிழ
உற்றநற் பறவைகட்கு உதவாதாம் ! -- பெற்றதனில்
குறைநேரக் காண்பதெலாம் கொடுமையே; வாழ்வினிலே
சிறகொடிந்த பறவைக்கேது சீர் ?
சிறகொடிந்த பறவையெனல் சீரழிந்த நிலையுணர்த்தும் ;
பிறவொன்றும் உணர்த்தாதாம் பெரிதுமாய் ; -- குறையுடன்
வாழ்வதினும் கொடிதானது வையகத்தில் வேறில்லை,
தாழ்வுறக் காண்பதனை தவிர் !
சிறகொடிந்தப் பறவையென சீரில்லை , சிறப்பில்லை;
இரையென்றே ஆகிடுமாம் எளிதினிலே ! -- குறைநேரக்
கண்டுவிட விதிமுடிந்தக் கதையேதான் ; அவைகட்கு
உண்டாமோ வாழ்விந்த உலகில் ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...