ஒற்றைச் சிறகோடு : கவிஞர் சுகா


இறைவன் படைத்த
இரட்டைச் சிறகுகளோடு
குறையொன்றும் இல்லாமல்
சிறகடித்துப் பறந்தேன்
மறைந்திருந்து எய்தானோ
மாயவலை விரித்தானோ
சிறையிட்டுக் கொள்ளத் துடித்தானோ
விரைந்து வந்த வில்லம்புக்கு
இறையாகிப் போனதே - என்
ஒற்றைச் சிறகு!
நொடிப் பொழுது துடித்தபோதும்
ஒடிந்துப் போனதென்னவோ
ஒற்றைச் சிறகு தானே
உறக்கச் சொன்னேன் - என்
உள்ளம் பறந்தது வானில்
இரக்கமற்ற வேடுவனை
மறந்து பறக்கிறேன்
வியந்தும் பார்க்கிறேன் - என்
ஒற்றைச் சிறகுக்குள்ளும்
குவிந்து கிடக்கிறது
காற்றை எதிர்கொள்ளும்
போற்றற்கரிய பொக்கிஷமாய்
மாற்றுச் சிந்தனையெனும்
மாமருந்து உள்ளதென்பதை
உணர்த்திய பொழுதுக்காய்
உளமார உரைக்கின்றேன்
நன்றியெனும் நற்சொல்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...