நீர் வற்றிய குளம்: ரெத்தின.ஆத்மநாதன்


நீர் வற்றிய குளத்திலாங்கே
நிம்மதி இழந்தே வாடும்
நீர்வாழ் உயிரினங்கள் பல
நிலத்திற்கே படை யெடுக்கும்!
தவளைகள் முதலைகள் தண்ணீர்ப் பாம்புகளென
அனைத்துமே நிலம் தேடியோடும் ஆனாலும்
அத்தனை மீன்களுமே அக் குளந்தன்னிலே
தற்கொலை செய்து கொண்டே தம்வாழ்வை மாய்த்துக் கொள்ளும்!
மீன்களாய் வாழ்வதிங்கு வெற்று மனிதர்களே
என்றே சொன்னால் ஏற்புடையது அதுவுந்தானே!
ஏழையாய் எளியராய் எப்போதும் நல்லவராய்
வாழ்வோர்தானே இங்கு வதிகிறார் பெருந்துன்பத்தில்!
முதலைகள் பாம்புகள் தவளைகளாவது
அரசியலார் அதிகாரிகள் அவர்எடுபிடியென
கொண்டே பார்த்தால் குவலயந்தன்னில்
எல்லாமே இங்கு எளிதில் புரியும்!
குளத்து நீரில் வாழ்பவை தன்னில்
மீன்களே என்றும் மிக உத்தம மானவை!
வாழ்வோ சாவோ வதிவதே குளமென
மானமுள்ள மனிதராய் வாழும்!வீழும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...