சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

நீர் வற்றிய குளம்: கவிஞர். கோவிந்தராஜன்  பாலு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வற்றிய குளத்தினில் வாடுது  கொக்குமே 
  வாடிய குயிலுமே வருத்தமாய் அலையுதே 
பற்றிய  கொடிகளும் பட்டதால் தொங்கிட 
   பசுமைநி  றங்களும் பழுப்புநி றமானதே. 
முற்றிய நிலையினில்  மூங்கிலின் பூக்களும் 
   மூழ்கிட எருமையும் முனைப்புடன் அலையுதே. 
நெற்றியில்  வியர்வையும்  நிலத்தினில் விழுந்திட 
நெஞ்சமும்  கலங்கிட  நிறைந்தது கவலையே.

தேடினேன்  பசுமையைத்  தென்றலைக் கூப்பிட 
  தேங்கிய  சகதியில்  தேய்ந்தது  மனமுமே.
வாடினேன் நெஞ்சமும்  வாட்டமும்  கொண்டிட 
  வறுமையின்  கோலமாய் வறட்சியில் குளமுமே
பாடிடும் பறவைகள்  பாட்டினை  மறந்ததோ. 
  பனையுமே பட்டதே  பாலையும். தோற்றதே. 
நாடிடும் விலங்குகள்  நாடின நீரையே 
  நாடுவோம் இறைவனை நல்மழை வேண்டியே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.