நீர் வற்றிய குளம்: -பெருமழை விஜய்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

வற்றிய குளத்தைத் தேடி வந்திடுமோ உயிரினங்கள்பற்றிய உலக வாழ்வில் பாவங்கள் அகன்றிடுமோநித்திய வாழ்க்கை தன்னை நீரின்றி நினைக்கலாமோசத்தியப் பிரமாணம் எடுப்போம் தண்ணீரைப் போற்றவென்றே!உலகமே துவண்டு போகும் ஒட்டுமொத்தமாய் அழிந்து போகும்பசுமையைப் பார்க்காமலே பல பேரும் வருந்தி மடிந்து போவர்வாழ்க்கையின் வசந்தங்களெல்லாம் வராமலே நின்று போகும்வற்றிய குளங்களெல்லாம் வளமுடன் நிரம்பிடாது போனால்!குளங்களில் நீர் நிறைந்தாலே குமுதமும் மகிழ்ந்து விரியும்பழங்களில் இனிப்பிருந்தால்தான் பலருமதை ருசித்து மகிழ்வர்இனங்களில் மாற்றமிருந்தாலும் எல்லோரும் மனிதர்தானேமனங்களில் மகிழ்வையேற்ற வற்றிய குளம் நிரம்ப வேண்டும்!குளத்தினில் நீர் வற்றிப்போனால் கும்பிதான் மிஞ்சி நிற்கும்அகத்தினில் அன்பில்லாவிட்டால் அக்குடும்பம் நலிந்துபோகும்வற்றிய குளம் நிரம்ப வருணனே நீ இறங்கி உதவ வேண்டும்அத்தனை குளமும் நிறைந்தால் அண்டமே மகிழ்ந்து ஆடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...