இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆறோடும் மண்ணெல்லாம் கடத்தி விட்டார்      அகன்றநதி குறுகிவிட நீரும் வற்றஊரோடும் உறவோடும் வாழ்ந்த மக்கள்       ஒருதொழிலாம் விவசாயம் விட்டு விட்டுகாரோடும் நகருக்கு வந்து விட்டார்       கண்டதொழில் செய்வதற்கு முனைந்து விட்டார்பேரோடும் பெருமிதமாய் வாழ்ந்தி ருந்த      பெருங்கதையை ஒரேயடியாய் மறந்து விட்டார்.நீரோடும் பாதையெலாம் கொஞ்சங் கூட      நிலமிருந்தால் ஆக்கிரமித் துவிட்டு நல்ல சீரான கட்டடத்தைக் கட்டி விட்டு     செயலாக மறந்ததனால் மழையால் வெள்ளம்ஆறதனில் பாய்வதற்கு இடமு மின்றி     அங்கங்கே பாய்ந்துவிட்டு வழியு மின்றிஊருக்குள் பாய்ந்ததனால் அழிவைச் செய்த     ஒருபாடம் கற்பித்துச் சென்ற தம்மா...இயற்கையவள் மடியினிலே கையை வைத்தால்      என்றும்நம் சீரழிவின் கார ணத்தைஇயற்கையாக வரவழைத்துக் கொள்ளு கின்றோம்       எத்தனையோ இடங்களிலே பாடங் கற்றோம்முயற்சிசெய்து காப்பதற்கு முன்னெ டுப்போம்        முடிந்தமட்டும் மரம்வளர்த்து காடு செய்துவியக்குவண்ணம் மழைபெய்ய வைப்போம் இந்த       வியனுலகை வருந்தலைமு றைக்காய்க் காப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.