இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்: அழகூர். அருண்.  ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆறோடும்  எனினும்அதில்  நீர்இருக்காது !---ஒரு            அவலமிதனைப்  போலுலகில்  வேறு  இருக்காது !நீரோட்டம்  தனைத்தடுக்க  உரிமைகிடையாது !---இந்த            நிலைப்பாட்டைக்  கொண்டுவிட  நாடு  தாங்காது !சீரான  மன்றத்தீர்ப்பை  ஏற்றிடவேண்டும் !---இதை            சித்தராம  ஐயாநன்றாய்  உணர்ந்திட  வேண்டும் !பாராள  வருவோர்க்குப்  பண்புகள்வேண்டும் !---அந்தப்             பண்பில்லார்  ஆட்சிநாட்டை  சிதறிடச்  செய்யும் !நீர்ஓடா  ஆறுகளே  பலவுண்டு  தமிழகத்தில்          நிறைவாக  மழைபொழியா  திருக்கின்றக்  காரணத்தால்!சீர்கெட்டுப்  போனதென்ன  தஞ்சைவள  நாடதுவும்          சிறிதேனும்  கருணையின்றி  கன்னடியர்  தடுப்பதனால் !கூர்கெட்டோர்  அன்னவரின்  செயலதனைக்  கண்டிட்டும்          குறட்டைவிட்டு  உறங்குதுபார்  உச்சநீதி  மன்றமதும் !பார்ஆளும்  மோடியிதை  கண்டிட்டும்  வேடிக்கைப்          பார்ப்பதேன்,  வாய்வீச்சு  எல்லாமும்  வீண்தானே !நீரோடா  ஆறுகளும்  நிறையவே  இருக்குதிங்கே ;சீரோடு  பெருகத்தான்  சிறப்பெய்தும்!---பாரெங்கும்மழையின்றிப்  போனதனால்  மண்வளமை  குன்றியதே ;அழைத்தாலும்  வாராதோ  அது ?பாலாறும்  வறண்டிட்டுப்  பாலைவனம்  ஆனதுபோல்காலத்தால்  ஆகிடுமோ  காவிரியும் ?---மேலமர்ந்தமதிகெட்டோர்  புரிந்திட்ட  மாண்பில்லாச்  செயலால்நம்விதிமாறிப்  போனதென்றே  விளம்பு !போராடி  நீரைப்பெற  புறப்படுவோம்  களம்நோக்கிதீர்ந்திடாத  நீர்வழக்கும்  தீரும்வரை !---பாராண்டிடவந்திட்டோர்க்  கெல்லாமும்  வாய்மையது  சிறிதுமிலை;நிந்திக்கத்  தக்கவர்கள்  நீசர் !                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.