கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீரமங்கை:  கு.முருகேசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

புலியை விரட்டுபவள்
மட்டுமா வீரமங்கை!
புகுந்த வீட்டின் வறுமையை
விரட்டுபவளும் வீரமங்கையே!

வீட்டு வாசலில் கணவனைக் காத்தவளும்
வாடி வாசலில் காளையைக் காத்தவளும்
நெடுவசலில் விவசாயத்தைக் காத்தவளும்
வீரமங்கையே!

எதிரியை அம்பு செலுத்தி
வீழ்த்துவதா வீரம்!
எதிரியை அன்பு செலுத்தி
வாழ்த்துவதே வீரம்!

அன்று நாட்டு சுதந்திரத்திற்காக 
போராடியவள் வீரமங்கை!
இன்று வீட்டில் சுதந்திரத்திற்காக 
போராடுபவளும் வீரமங்கையே!

மலையில் தேன் எடுக்கப் 
போராடுபவளும்!
மண்ணில் மீத்தேன் எடுப்பதை-எதிர்த்துப்
போரடுபவளும் வீரமங்கையே!
 
வானில் பறந்தவளும் 
வீரமங்கை!
வரதட்சணையை எதிர்ப்பவளும்
வீரமங்கையே!

உலகத்தில் பிறக்கும் 
குழந்தைகளுக்கெல்லாம் பாலுட்டும்
பெண் பாலுக்குத் தான்
கள்ளிப்பால் ஊட்டுகிறோம்!

தாய்ப்பால் குடித்து வளர்ந்ததே
இவ்வளவு வீரமங்கைகள் என்றால்!
கள்ளிப்பால் குடித்து மடிந்தது
எவ்வளவு வீரமங்கைகளோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.