நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீர மங்கை: தவமணி ரீகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

இவ்வுலகில்
இறைவன் படைத்தவற்றில்
இறைவன் கூட நிகரற்ற
இனம் பெண்...

இல்லம் தோறும்
இன்ப மழை பொழிபவள்
அவள்...

அனைத்தையும் அடுத்தவர்க்காய்
அர்பணித்தவள்
அன்பை மட்டுமே எதிர் பார்ப்பவள்...

அனைத்து நல்வளிகளும்
அவள்  காட்டியவை...
உலகில் அதிக வலிகள்
அனுபவிப்பவள்
அவள் தானே...

தன்மானத்தின்
தனிஉருவம் அவள்...

அன்னையும் அவளே
சகோதரியும் அவளே
தோழியும் அவளே
காதலியும் அவளே
மனைவியும் அவளே
மகளும் அவளே

உலகில் உள்ள
அனைத்து உறவுகளும்
அவள்  கொடுத்தவையே...

இன்பங்களின்
தொழிற்சாலை பெண்..

இன்னல்களின்
மயானமும் அவளே...

அன்பென்ற வார்த்தையின்
அகராதி அவளே...

அவள்
தெய்வம் போன்றவள்
அல்ல..

கண்முன் தோன்றிய
கடவுள் அவள்...

பூமியில் பிறந்த  தேவதை
அவள்...

தன் வாழ்நாள் முழுவதும்
அடுத்தவர்களிற்காக வாழும்
ஒரே இனம் அவள்...

அவளுடன் ஒப்பிட
மெழுகுவர்த்தி கூட
தகுதியற்றது...

பெண் என்றும் அடிமை அல்ல..,
இந்த அகிலம் தான் அந்த வீர மங்கையின் அடிமை..!

மாதர் தமை இழிவு செய்யும்
மடமை தனை கொளுத்துவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.