கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீர மங்கை : கே.நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

முறம் கொண்டு விரட்டினாள் ஒரு புலியை  அன்று வீர மங்கை ஒருத்தி ...புலி புற முதுகு காட்டி ஓடியது முறம் பார்த்து அல்ல !... முறம் பிடித்த மங்கையின் முகம் பார்த்து ! மங்கையரின் வீரம் தெரியும் அவர் முகத்தில் ...செயலில் ! விண்வெளியில் பயணித்த முதல் பெண்ணும்   அந்த விண்ணுக்கு விண்கோள் ஏவும்  நம் பெண்மணிகள் வரை ஒரு ஒரு மங்கையும் வீர மங்கையே !இல்லறத்தை ஒரு நல்லறமாக உருவாக்கி நல்ல ஒரு சந்ததியை இந்த உலகுக்கு கொடுக்கும் ஒரு ஒரு இல்லாளும் ஒரு வீர மங்கையே !  வீர தீர செயல் தேவையில்லை ஒரு பெண்ணுக்கு   வீர மங்கை பட்டம் பெற !தன் கண் முன்னே கருகும் பயிர் கண்டும் தான் வாடாமல் தன் பிள்ளைக்கும் தன் குடும்பத்துக்கும் அரை வயிற்று கஞ்சி கொடுக்கும் ஒரு உழவனின் இல்லாள் ஒரு வீர மங்கையே !படிப்பு வாசனையே இல்லாமல் ஒரு குடிகார கணவனுடன்  குடும்பம் நடத்தி தான் பெற்ற குழந்தைகளை இந்த அவையத்துமுந்தி இருக்க செய்யும் இலக்கில்  நாளும் உழைக்கும் ஒரு ஒரு தாயும்  வீர மங்கைதான் என்  பார்வையில் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.