வீர மங்கை: மா.உலகநாதன்


அறுபத்தைந்து முறை அடைக்கப்பட்டாலும்
அன்றாடம் அச்சுறுத்தல்,அவமானப் பேச்சு
ஆயிரம் தான் வந்தாலும்
மதுவுக்கு எதிராக அசராமல் போராடும்
மாத் தமிழச்சி நந்தினியைத் தான்
வீரமங்கை என்பேன் நான்!
நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்பது
வள்ளுவம்; இந் நஞ்சுண்டு
நாளும் நலியும் நாட்டோர்
வாழ்வை மீட்டெடுக்கும் பணிசெய்யும்
இவரல்லால்,இன்னொருவர்
வீரமங்கை ஆவாரோ?
இளமையைப் பணயம் வைத்து ,
மது ஒழியாதா,மணாளன்
திருந்துவானா?என்று ஏங்கும்
குடும்பங்களுக்கு ஏற்றமிகு
நம்பிக்கையே நந்தினி தான்!
இவரைப் பெற்றவர்கள் எந் நோற்றான்!
என்று எதிர்காலம் பேசும்;
இனி நந்தினி தான்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...