எதிர்காலம்: சசி எழில்மணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

துள்ளித் திரிந்து விளையாடி
கவலையென்பதை ஏதுமறியா
பசுமை நினைவுகளாய்
மனதில் படிந்த
கடந்த காலம்
காலமென்னும் கயிற்றில்
கட்டிவைத்த பொம்மைபோல
ஆட்டுவிப்பார் யாரென்றறியாமல்
ஆடிக் கிடக்கும்
நிகழ்காலம்
அசைவ தெல்லாம்
அவன்செய லென்றால்
காலமும் மாறாதா
கவலைகள் தீராதா
பசுமை நிகழ்வுகள்
மீண்டும் துளிர்க்காதா
எதிர்பார்ப்புகள் கொட்டிக்கிடக்கும்
எதிர்காலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...