குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி...

News image
டிடிவி தினகரன் பேட்டி
Updated On :24 பிப்ரவரி 2026, 8:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மதுரை கே.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன்,

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% பேர் ஓரணியில் திரண்டுள்ளோம். தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டுள்ளார்கள்.

யாரோ ஒரு சில பேர், ஒதுங்கி இருப்பவர்கள், விலகி இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள்.

எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள், பேசினார்கள். அமமுக மற்றும் அதிமுக கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.

35 லிருந்து 40 தொகுதிகள் வரை திமுகவிடம் காங்கிரஸ் கேட்கிறார்கள். தனி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள், அது உண்மை. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடருமா என்பது தெரியவில்லை.

தேசிய முஸ்லிம் லீக் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் தற்போது இரண்டு தொகுதிகள்தான் தருவோம் என்று திமுகவினர் சொல்கிறார்கள். இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை.

அமமுக, அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம்.

எங்கள் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம்.

இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எந்த ஒரு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு.

அமமுக கட்சிக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக கட்சி மூலம் செய்வோம்.

பாஜக வலியுறுத்தலின்படி அமமுக செயல்பட்டு அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்.

ஓபிஎஸ் எந்த கூட்டணியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவரின் தனிப்பட்ட உரிமை. அதிமுக உருவாகியதே திமுகவுக்கு எதிராகத்தான். தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்து தனித்துவிடப்பட்ட ஒரு சிலர் உணர்ந்து எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.