

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில் அதில் பாமகவின் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் இணைந்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசியபோது இதனை உறுதிப்படுத்தினார்.
அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போன்றவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டை. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என ஏற்கெனவே நான் பொதுக்குழுவில் சொன்னேன். பழைய விஷயங்களை நினைத்து, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்று நோக்கத்தோடு இந்த முடிவெடுக்கிறோம். நாங்கள் விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி வருவதற்கு மக்களாட்சி வருவதற்கு நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்" என்று தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் இன்று(புதன்கிழமை) காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் டிடிவி தினகரன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கையை உயர்த்தி கூட்டணியை உறுதி செய்தார். தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக(அன்புமணி), அமமுக, ஜி.கே. வாசனின் தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன. தேமுதிகவையும் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக என்டிஏ கூட்டணியில் அமமுக இருந்த நிலையில், கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்ததால் டிடிவி தினகரன் விலகினார். என்டிஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மீண்டும் என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ளார்.
summary
TTV dhinakaran's AMMK joined in ADMK- BJP alliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
என்டிஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்!

அதிமுக, இபிஎஸ் பெயரைக் கூற மறுத்த டிடிவி தினகரன்! ஆனால்...
திமுக ஊழல் ஆட்சியை அகற்ற இணைந்துள்ளோம்! - பியூஷ் கோயல், டிடிவி தினகரன் பேட்டி

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; இது பங்காளிச் சண்டைதான்! - டிடிவி தினகரன்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


