குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூ. கட்சி குழு அமைத்துள்ளது பற்றி...

News image
மு. வீரபாண்டியன்- கோப்புப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 8:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைத்துள்ளது.

கே. சுப்பராயன் எம்.பி., முத்தரசன், பழனிசாமி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் வருகிற பிப். 27 ஆம் தேதி முதல் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில்,

"இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் எஸ். கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், திமுகழக தலைமையோடு தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த மு. வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்) இரா. முத்தரசன், கே. சுப்பராயன் எம்.பி., கோ. பழனிசாமி ஆகிய 4 உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு வரும் 27.02.2026 ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.