மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

எதிர்காலம் :   ஆ.மகராஜன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

பறக்கக் கற்றுக்கொள்ள வருபவர்களின்
இறக்கைகளைக் கத்தரித்து அனுப்புகின்றன 
கல்விக்கூடங்கள்...

மாணவர்களின் 

அறிவுத்திறனை வளர்க்காது,
நினைவுத் திறனை சோதிப்பதோடு
நிறுத்திக் கொள்கிறது 
கல்விமுறை..

படைப்புத் திறன்களை மழுங்கடித்து,
பதற்றமும் போட்டியும் உருவாக்கி,
பந்தயக் குதிரைகளாய்
மாணவர்களை விரட்டிக் 
கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்...

மதிப்பெண்கள் மட்டுமே,
எதிர்காலம் உட்பட 
எல்லாமும் நிர்ணயிக்கும் 
சர்வ வல்லமை கொண்ட 
ஒற்றைக் காரணியானதால்,
மனப்பாடம் செய்து
மதிப்பெண் பெறும் எந்திரங்களாகவே 
 மாறிப் போனார்கள் மாணவர்கள்..

அழுத்தங்களை எதிர்கொள்ள இயலாது 
தற்கொலை செய்யும் கோழைகளாகவும் 
 கொலை புரியும் கொடூரர்களாகவும் 
எதிர்கால இந்தியா பரிதபமாய் நிற்கிறது..!

கூடுகுதவாத ஏட்டுச் சுரையைப்
பயிரிடக் கற்றுத் தரும் இந்த
கல்வி முறை மாற்றப்பட வேண்டும்..
அதுவரை, உதவாக்கரைக் 
கல்விக் கூடங்கள் பூட்டப்படவாவது 
வேண்டும்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.