மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

புதியடைரி : சௌம்யநாராயணன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

அற்பக்காகிதமே ,
எத்தனை நாள் என் கிறுக்கல்களை 
சுமக்கப் போகிறாய் ? 

என்னை தனியாய் தோல்வியில் விட்ட 
சமுதாயத்தின் மீதுள்ள கோபத்தை உன்னிடம் 
தான் காட்டுகிறேன்,

சக உயிரிடம் நான் படும் அவமானங்களை 
உனக்கு பரிசாக அளிக்கிறேன்,
நீயோ மௌனத்தால் என்னை சந்தாப்படுத்துகிறாய் .
வீரியம் கொண்டெழும் 
என் சொல் விந்துகளை நீ சுமந்து .
நினைவுக் குழந்தைகளை நிதம் பிரசவிக்கிறாய் ? 
மலடியாக நீ இருந்திருக்கலாம், 
நான் திரும்பிப்பார்க்கையில் 
வெறுமை இருந்திருக்கும்.
இல்லை இல்லை , 
என் ஏமாற்றமான வாழ்வின் ஒரே வெற்றி  நீ தான் . 
வருடம் முடியும் போது நீ உன்னையே புதுப்பித்து
புது மணப்பெண்ணாக 
எனக்காக காத்திருக்கிறாயே.
வா நாளைய நம் புதுப் பக்கங்களாவது ,
என்னால் உனக்கும் 
உன்னால் எனக்கும் 
மகிழ்ச்சியாகட்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.