மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

புதிய டைரி;  இளவல் ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

ஒவ்வோராண் டுத் தொடங்கும் போதே நெஞ்சில்     உறுதிகள்வ ரிசையாகத் தோன்றும் யாவும்செவ்வனேநி றைவேற்ற வேண்டும் என்ற   சிந்தனையே எழும்,ஆயின் செய்தோ மாஇச்செவ்வியநற் கேள்வியினைக் கேட்டுக் கொண்டால்    செயலதனில் தடுமாறித் திசைகள் மாறிவெவ்வேறாய்ப்பயணித்துச் சென்றி ருப்போம்,    வெறுந்தேதி கிழித்தபடிக் கழித்தி ருப்போம்.புதியடைரி எழுதவேண்டும் எனுமா சையில்     பிள்ளையார்ச் சுழிபோட்டு வைத்தி ருப்போம்.பதிவதனை உள்ளபடி எழுத லாமோ     படித்ததனைப் படித்தபடி பகிர லாமோஉதித்ததெலாம் உதித்தபடி உரைக்க லாமோ    ஒவ்வொன்றாய் நிகழ்வுகளைச் சேர்க்க லாமோமுதிர்ச்சியுள்ள அறிவதனை மொத்த மாக    முகவுரையாய் எழுதிவர முடிய லாமோஎன்றெல்லாம் எண்ணியந்த எண்ண மெல்லாம்    எடுத்தியம்ப நினைத்தாலே எங்கி ருந்தோதன்னாலே பொல்லாப்பு சூழு மென்ற    தவிப்பாலே அன்பளிப்பாய்க் கிடைத்த டைரிமுன்பக்கந் தொடங்கிமெல்ல முடிய மட்டும்    முழுவதுமாய் ஒன்றுகூட எழுத வில்லைஎன்செய்ய என்னுளம்போல் வெள்ளை யாக    இருந்ததையோ புதியடைரி எப்போ தும்போல்!         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.