வெற்றி முரசு : முனைவர் . கா. மகேந்திரபிரபு


நல்ல எண்ணத்தை பெறுவதே
நல்ல நண்பர்கள் அமைவதே
நல்ல இலக்கு கொள்வதே
வென்று வாகை சூடும் வெற்றி !
வெற்றிமுரசின் ஒலி காதில் விழ
வெற்றி விழா எடுக்கும் காலமிது !!!
வெற்றி முடிவல்ல அது பாதை
வெல்வோம் முரசின் முத்திரையை !
வீர வெற்றி விவேக முடிவு
வீதியில் வெற்றி முரசு கொட்டும்
வாழ வாழ்ந்து சாதிக்க வெற்றி
வலுவான வினைஊக்கி தானே !
வெற்றி-சாதனை இணைகள்
ஒரு சேர கிடைப்பது நல் வாய்ப்பு !
வெற்றி தரும் ஊக்கம்-மனநிறைவு
வீதியில் மகிழ்ச்சித் தோரணமாய் !
நம்பிக்கை தரும் பொறுமை
பொறுமை தரும் நிதானம்
நிதானம் தரும் திறமை
திறமை தரும் வெற்றி முரசு !!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...