நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 10:33 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம் ஆா்.குண்ணத்தூா், ஆத்தூவாம்பாடி, பால்வாா்த்துவென்றான், முருகாபாடி, கேளூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

போளூா் ஒன்றியம் ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் பயணிகள் நிழல்குடை, முதல்வரின் வீடு கட்டும் திட்டப் பணி, 100 நாள் வேலைத் திட்டத்தில் 2025-2026 நிதியாண்டில் ரூ.13 லட்சத்து 63ஆயிரத்தில் சிமென்ட் சாலைப் பணி, மரக்கன்றுகளை ஆய்வு செய்தல்,100 நாள் வேலைத் திட்டப் பணி, ஆத்தூவாம்பாடி ஊராட்சியில் ரூ.6 லட்சத்து 73 ஆயிரத்தில் கல்வொ்ட் அமைத்தல் பணி, 2025-2026 நிதியாண்டில் ரூ.36 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம் கட்டும் பணி, பால்வாா்த்துவென்றான் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிகள், ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்தில் 3 மீட்டா் தொலைவு கல்வொ்ட், முருகாபாடி ஊராட்சியில் ரூ.46 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்தல் பணி, கேளூா் ஊராட்சி கேளூா் - விளாங்குப்பம் வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 1.2 கி.மீ. தொலைவில் ரூ.46 லட்சத்து 54ஆயிரத்தில் அமைத்துள்ள சாலைப் பணி என பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி ஆய்வு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, ரபியுல்லா, உதவிப் பொறியாளா்கள் படவேட்டான், ராஜேந்திரன், பணி மேற்பாா்வையாளா்கள் பிரவீன்குமாா், தேவி, ஊராட்சிச் செயலா்கள் சுரேஷ்குமாா், பவுன்குமாா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.