மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை; பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

பால்வாயில்   மார்பிருந்து   தமிழோ   டூட்டி            பண்பாட்டைத்  தாலாட்டில்   இசையோ  டூட்டிவேல்வீரம்  ஒழுக்கத்தை   மதிகாட்  டூட்டி            வியர்வைவிழ   உழைக்கத்தன்   மானம்  ஊட்டிதோல்விகளே   வந்தென்னைக்   குலைத்த   போது            தோள்தட்டி   நம்பிக்கை   நெஞ்சில்   ஊட்டிஆல்விழுதாய்   நான்வளர   வேராய்   நின்றே            அன்பாலே   எனைநனைத்த   மழைதான்   அன்னை !தன்னுடைய   பெற்றோரைச்   சுற்றத்   தாரைத்            தான்பிறந்த   இடந்தன்னைப்   பிரிந்து   வந்தேமுன்பின்னே   அறியாத   புகுந்த  வீட்டின்            முழுப்பெருமை   காக்கின்ற   உறுதி   யோடேஇன்பத்தில்   துன்பத்தில்   தோளாய்   நின்றே            இல்லறத்து   விளக்குதனில்   ஒளியாய்   நின்றேஎன்பெயரைச்   சொல்லபிள்ளை   பெற்ற  ளித்தே            எனையன்பால்   நனைத்திட்ட   மழைதான்   இல்லாள் !நல்லொழுக்கம்   பண்பாடு   கல்வி   தன்னை            நாள்தோறும்   கற்றுயர்வாய்  வளர்ந்து   நின்றுசொல்லாலும்   செயலாலும்   சங்க   நூல்கள்            சொல்கின்ற   அறவழியில்  நாளும்  நின்றுநல்லவனாய்   வல்லவனாய்   நேர்யை   யாக            நற்செயல்கள்   தன்னழைப்புப்   பொருளில்   செய்துபல்லோரும்   போற்றயென்றன்    பெயரைக்   காத்துப்            பாசத்தால்   எனைநனைத்த   மழைதான்   பிள்ளை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.