கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை:  அழகூர். அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

கனிவுடனும்  பொறுப்புடனும்  கருத்துடனும்  செயல்படும்நல்புனிதநன்  நாடென்றிதைப்  போற்றுகிறார்!---இனியென்றும்,எங்குமே  வறுமையது  இன்னாட்டில்  இல்லையெனும்மங்கலமே  எனைநனைத்த  மழை!நாடின்றோர்  வல்லரசென  நம்மைபிறர்  போற்றுகிறார்கோடிகோடி  மக்கள்நாம்  கொண்டாட!---நாடின்றுதுலக்கமதை  பலப்பலத்  துறைகளிலும்  கண்டமறுமலர்ச்சியதே  எனைநனைத்த  மழை!இன்னாட்டின்  வளர்ச்சியதும்  ஏற்றமுறக்  கண்டதெலாம்மன்மோகன்  ஆட்சிதனின்  மகிமையால்!---முன்னமதாய்,வீட்சிகண்ட  நிதிநிலைமை  வீருகொண்டு  எழுச்சியுற்றமாட்சியதே  எனைநனைத்த  மழை!ஆழ்ந்தமன  உறுதியுடன்  அயராமல்  போராடிபாழ்பட்ட  சட்டம்நீங்கப்  பார்த்திட்டார்!---ஏழுநாட்கள்துகிலின்றிப்  போராடி  துலக்கமதைக்  கண்டயிளைஞர்மகிமையதே  எனைநனைத்த  மழை!பொழுதெல்லாம்  போராடி  போற்றத்தக்க  வெற்றிகண்டார்பழுதற்ற  மாணவர்தம்  பண்பினால்!---எழுச்சிகண்டு,நெகிழ்ந்திடுதே  மக்கள்தமின்  நெஞ்சமெலாம், காண்கின்றமகிழ்ச்சியதே  எனைநனைத்த  மழை!கொண்டமன  உறுதிசிறிதும்  குலையாமல்  மாணவர்கள்எண்ணற்றோர்  போராடும்  எழுச்சியற்றார்!---ஆண்டாண்டாய்,வேண்டிநின்ற  அவர்களன்று , விவேகமுடன்  காத்திட்டமாண்பதுவே  எனைநனைத்த  மழை!                 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.