மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை; லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

அன்னையின்  பாச மழையில் நனைந்த போதும்தந்தையின் கண்டிப்பு மழை கொதித்த போதும்சுகானுபவத்தை தொட்டேன் ; துளிவிழும் மழையம்  மகானுபவத்தை தருவதில்லை  தானே ?மனைவியின் அணைப்பில் மகிழ்ந்து மக்களின்மழலை மழையைக் கண்டபோது  உடலில்புளகாங்கித முண்டாகி  புரிந்த இன்பத்தின் மேலாம்பொட்டு மழைதான் என்ன செய்திட மு டியும்?கொட்டோ கொட்டென  கொட்டித் தீர்த்தபோது  பட்ட துன்பம் கோடி , பகர்ந்திட வார்த்தையில்லை;வீட்டில் தண்ணீர், வெ ளியில் தண்ணீர், ரோட்டை  மேவிவிழுந்தோடும் வெள்ளம்; நனைத்த மழையோ  கனைத்து சிரித்தது.விதைத்த பயிருக்கு விழும் மேல்மழை இல்லை ; இன்றோவிவசாயி படுவதோ சொல்லி  மாளாத தொல்லை;தரையைநனைத்து வைக்கவும் மழைப்  பொழிவில்லை; நாவைநனைத்து வைக்கவும் நீரின்றிப் போகும் நாளை.நீரை சேமிக்கும்  நிலையில்லை யானால்  இனிமேல்யாரை நொந்தும் பயனின்றிப் போகும் ; மரங்களை நட்டுமாநிலம் காப்போம் ; மழையை வரவழைக்கும்  மரங்களேவானிலை மாற்றி அனைவரையும் நனைக்கும்; காக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.