நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

கோடை மழை: முத்துலெட்சுமி .ஜெ

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

திசைகளற்ற திரைகடலின்
திசைமானியற்ற
பயணத்தின்
தென்றல் நீ

வறண்ட காற்றில்
உலர்ந்த நாவிற்கு
தூவும் கோடை
மழை நீ

பாதை இதுவென
இலக்கற்ற பயணத்தின்
வழித் துணையாய்
வந்த வரம் நீ

வீசும் காற்றிலே
வாசமாய் கலந்திருக்கிறாய்
நிறைந்திருக்கும் நீரிலும்
நீயே இருக்கிறாய்

ஆளரவமற்ற
தனிமையில்
நான் பேசிக் கொண்டிருப்பதெல்லாம்
கேட்டுக் கொண்டிருப்பதாய்

உணரவைக்கும் நீ

என்னுள் இருந்து
என் தனிமைகளுக்கு
இனிமைகள் சேர்க்கும்
கனவான நீ

அழகிய வரம் நீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.