பால் திரிந்துவிட்டால் கவலை ஏற்படலாம். ஆனால், இனி இந்த வழியைப் பயன்படுத்தி திரிந்த பாலை நல்ல முறையில் பயன்படுத்தலாம்.
ஒரு மணி நேரம் குளிர்ந்த நீரில் பூண்டை ஊறவைத்து, பிறகு தோலை உரித்தால் எளிதில் உரிந்துவரும்.
சிறிது சர்க்கரையை பச்சைப்பட்டாணியில் தூவிவிட்டு பிறகு வேக வைத்தால், நிறமும் மாறாது. சுவையும் கூடும்.
பார்லியையும், கோதுமை மாவையும், சம அளவில் கலந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.
எலுமிச்சைச் சாறுடன் சிறிது உப்பு சேர்த்துகொண்டால் சுவை கூடும்.
காய்கறி சாலட் செய்யும்போது சில பிரட் துண்டுகளைப் போட்டு விட்டால் சாலட் நீர்த்துப் போகாமல் புதுவிதமான சுவையுடன் இருக்கும்.
வெள்ளரிக்காயில் பஜ்ஜி செய்தால் பஜ்ஜி தனி ருசியோடு இருக்கும்.
எலுமிச்சை, சாத்துக் குடி போன்ற பழங்களை வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்துப் பிறகு பிழிந்தால் சாறு கூடுதலாகக் கிடைக்கும்.
பருப்பு வகைகளை வேக வைக்கும்போது, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.
பீட்ரூட்டை வேக வைத்தவுடன் அதன் தோலை உரித்தால் சுலபமாக இருக்கும்.
பால் திரிந்து விட்டால், அதை கீழே கொட்டாமல் வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளிக் கொலுசுகளை 15 நிமிடங்கள் அதில் ஊறவைத்து, தேய்த்து எடுத்து துணியால் துடைத்து விட்டால் புதிது போல் பளிச்சென்று இருக்கும்.
சேப்பங்கிழங்கை கத்தியால் ஆங்காங்கே கீறிவிட்டு, அதன்பிறகு வேகவைத்தால், தோலை உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.
சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்து தக்காளியை வதக்கினால், சீக்கிரமாக வதங்கும்.
வத்தக் குழம்பில் ஒரு கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும் கூடும்.
ரவை ஒரு தேக்கரண்டி, பச்சரிசி மாவு ஒரு தேக்கரண்டி கலந்து கோதுமை மாவை கெட்டியாகப் பிசைந்து உடனே தடிமனாக தேய்த்து பூரி செய்தால் உப்பலாக வரும்.
தண்ணீரில் கொஞ்சமாக மோர் கலந்து வாழைப்பூவை நறுக்கி அதில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில், கிராம்பை வைக்கவும்.
கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யவும்.
சர்க்கரையுடன் சம அளவு பேக்கிங் சோடாவை கலந்து கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் தூவவும். அதை சாப்பிட்டு கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும்.
பிரியாணி இலையை பொடி செய்து கரப்பான் பூச்சிகள் உலாவரும் இடத்தில் தூவலாம். அந்த வாசனைக்கு வராது.
கோதுமை மாவில், ஃபோரிக் ஆசிட் சேர்த்து பிசைந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி கரப்பான் பூச்சிகள் உலாவரும் இடங்களில் வைக்கவும். அதை சாப்பிட்டால் கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும்.
- சௌமியா சுப்ரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடலைப் பொங்கல்

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

சாதம் குழைந்துவிட்டால்... சமையல் டிப்ஸ்!
சமையல் டிப்ஸ்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


