நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image
பங்குச்சந்தை வணிகம்
Updated On :26 பிப்ரவரி 2026, 5:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்றும்(பிப். 26) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,418.78 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 156.79 புள்ளிகள் அதிகரித்து 82,432.86 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 56.05 புள்ளிகள் உயர்ந்து 25,538.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ் ஆகியவை தலா 1 சதவீதம் உயர்ந்தன. மறுபுறம், இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.2 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.1 சதவீதமும் அதிகரித்தன. சென்செக்ஸ் ஐடி குறியீடு 1.4 சதவீதமும் அதிகரித்தது.

துறை ரீதியாக, நிஃப்டி எஃப்எம்சிஜி தவிர, மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்து வர்த்தகமாகின. நிஃப்டி ஐடி, பார்மா, ஹெல்த்கேர் ஆகியவை தலா 1 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன.

summary

Stock Market: Sensex up 150 pts, Nifty above 25,500; IT, pharma shares lead gains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.