கோடை மழை: கமலா பார்த்தசாரதி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

வா வாவென
வயல் வெளிகள்
பல்லாயிரம் கைகளால்
வரவேற்று அரவணைக்க
தா தா எமக்கு
உயிர் நீர் என
எமதருமை விவசாயிகள்
வானம் பார்த்து நிற்க
வருக வருக வென்று
அனைத்து நீர் நிலைகளும்
வழி மேல் விழிவைத்து
உன் வரவை எதிர்பார்த்திருக்க
உழவருக்கு வரமாய்
மற்றவர்க்கு அருட்கொடையாய்
வறண்ட பூமிக்கு அமுதமாய்
வாராய் நீ கோடை மழையே
மழழையின் இனிமை போல்
இசையின் இதம் போல்
இறையின் கருணை போல்
அமுததாரையாய் இறங்கி வாராய்
கோடை மழையே..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...