கோடை மழை: -பெருமழை விஜய்


கோடை மழை பெய்யும்போது
கொண்டாட்டம் இரட்டிப்பாகும்!
ஆடையை நனைத்துக் கொண்டு
அப்படியே ஆட்டம் போட்டு
பாலகனாய் மாறி அங்கே
பலவிதமாய் குதித்து ஓட
நோய்களெல்லாம் விலகிப் போகும்
நொடியினிலே உளம் குதிபோடும்!
புல் பூண்டு மா தென்னையென்று
மரங்களத்தனையும் மகிழ்வில் திளைக்கும்!
புலி சிங்கம் சிறுத்தையென்று
பொல்லாத விலங்குகள் கூட
ஆனந்தக் கூத்தாடி மழையை
அப்படியே ஏற்று மகிழ்ந்து
நாளெல்லாம் அதில் நனைந்து
நன்றாகத் தழைத்து வாழும்!
உலகிற்கே பசும் போர்வையை மழையே
உன்னால் மட்டுமே தர இயலும்!
இல்லறம் துறவறம் என
எல்லா அறமும் தழைத்தோங்கி
நாட்டு மக்கள் அனைவருமே
நலவாழ்வு கொண்டு இலங்க
வான்மழையே நீதான் என்றும்
வதிகின்றாய் மக்கள் உளத்தில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...