இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: மீனாள் தேவராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

இளம்பொலிவு நிலமகளின் பச்சைவண்ணம் புலவன்
உளங்கவர் எழில்முகம் எக்காலமுமவனை – மயக்கும்
வித்தைசெய் இயற்கை ஈன்ற காதலோவியம்
சிந்தை விட்டு  மறையுமா எந்நாளும்.

சூரியன் கொளுத்தக் கொளுத்தக் குளம் வற்றும்
ஏரிநீர் எள்ளவாக எள்ளவாகக் குறையும் – மழையும்
நிலத்தில் வீழினாலால் பச்சைப்புல்லும் முளையுமா
நிலமகள் பச்சைநிறம் குன்றும்.

பச்சைவண்ணம் மண்ணில் மறையாது மரங்களை
இச்சையோடு மண்ணில் செறித்துவிடில் – விண்ணை
நோக்கிக் கிளைக்கைளால் வீசியழைத்து வேண்டிய
மிக்க மழை மண்ணில் பொழியுமன்றோ
 

நீர்நிலைக் நீர்நிறைய பசுங்காட்சி பரவ
கார்நிறை வாழ்வு கரைந்திட வயலில் - துள்ளும்
கெண்டை வண்டலம்பும் நெற்கதிர் நாணிநிற்கும்
மீண்டு மீண்டு இச்சுழல் சுழலும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.