மகாராஷ்டிர மாநிலத்தில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காரணங்களால் 41 புலிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அம்மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக், வேட்டை, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 41 புலிகள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் 28 புலிகள் இயற்கையான காரணங்களாலும், 8 புலிகள் விபத்துகளிலும், 4 புலிகள் மின்சாரம் பாய்ந்தும், 1 புலி மட்டும் வேட்டையிலும் உயிரிழந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், வனவிலங்குகள் பாதிப்படைவதைக் குறைப்பதற்காக வனப் பகுதி வழியாகச் செல்லும் ரயில்கள் 40 கி.மீ. வேகத்தை கடைப்பிடிக்க வேண்டுமென ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
In the state of Maharashtra, it is reported that 41 tigers died due to various reasons in 2025 alone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஓராண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து ஐசிஎஃப் சாதனை

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



